Sunday 8 March 2015

இருசக்கர வாகனங்களின் அபரிமித பெருக்கத்தால் விபத்து: உயிரிழப்புகளில் தமிழகம் முன்னிலை


தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளாக 15 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.
இதற்கு இருசக்கர வாகனங்களின் அபரிமித மான பெருக்கமும், வாகன ஓட்டி களின் அலட்சியப் போக்குமே காரணம் என கூறப்படுகிறது.
சாலை விபத்து உயிரிழப்புகளில் 10 ஆண்டுகளாக தமிழகம் தேசிய அளவில் முதலிடத்தில் இருந்துவந்தது. 2013-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் விபத்துகள் தொடர் கதையாக நிகழ்ந்து வருகின்றன. இந்தியாவில் வாகன விபத்து களால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் தமிழகம் தொடர்ந்து முன்னிலையில் உள் ளது. கடந்த 2 ஆண்டுகளாக விபத்து உயிரிழப்புகள் சற்று குறைந்து வந்தபோதிலும், 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளது கவலையளிப்பதாக உள்ளது என்று அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டில் தமிழகத்தில் 67,250 விபத்துகளில் 15,190 பேர் இறந்துள்ளனர். 2013-ல் 66,238 சாலை விபத்துகளில் 15,563 பேர் இறந்தனர். இந்த ஆண்டின் முதல் மாதத்திலேயே 1,337 பேர் சாலை விபத்துகளில் இறந்துள்ளனர்.
இது குறித்து போக்குவரத்துத் துறையின் மூத்த அதிகாரிகள் சிலர் தெரிவித்ததாவது:
இரு சக்கர வாகனங்களின் பெருக்கமே விபத்துகளுக்கு முக்கிய காரணம். தமிழகத்தில் தற்போதுள்ள 2.01 கோடி வாக னங்களில் 83 சதவீதம் இரு சக்கர வாகனங்களே. சிலர் மிக வேக மாக வண்டிகளை ஓட்டுவதும், குடிபோதையில் ஓட்டிச் செல் வதுமே விபத்துகளுக்கு கார ணம்.
தமிழகத்தில் வாகன எண்ணிக் கையுடன் ஒப்பிடும் போது உயிரி ழப்பு விகிதம் குறைவேயாகும். 10 ஆயிரம் வாகனங்கள் வீதம் ஏற்படும் விபத்துகளை கணக்கில் எடுத்தால் தமிழகம் 16-ம் இடத்தில் உள்ளது.
எனினும், விபத்துகளைக் குறைப்பதற்காக பள்ளிப் பருவத்திலேயே போக்கு வரத்து விதிகள் போதிக்கப்படுகின் றன. பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங் கள் செய்யப்படுகின்றன. சாலைப் பாதுகாப்புக்காக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.130 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதில் போக்குவரத்து பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்துதல், சாலைகளை மேம்படுத்துதல் போன்ற நடவடிக் கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மேலும் நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து அங்கு விபத்துத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுவருகின்றன. அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும், மக்கள் ஒத்துழைக்காவிட்டால் விபத்து களைத் தடுக்கமுடியாது என்றனர்.
வேகமே காரணம்
தமிழக சாலை பாதுகாப்புக் கொள்கையை வகுத்துக் கொடுத்த குழுவின் தலைவரும், போக்குவரத்து ஆலோசனை கூட்டமைப்புத் தலைவருமான என்.எஸ்.சீனிவாசன் கூறியதாவது:
திறமையாக ஓட்டுவதாக நினைத்துக்கொண்டு அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டுவதே விபத்துகளுக்கு முக்கிய காரணம். வாகனங்கள் அதிவேகமாகச் செல்லக் கூடிய இடங்களைக் கண்டறிந்து அங்கு வேகத்தடைகளை ஏற்படுத்தி, தடுப்புகளைப் போட அரசு தீவிரமாக எடுக்க வேண்டும்.
குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவோருக்குக் கடும் தண்டனை விதிக்க வேண் டும். சாலை பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கி, விபத்து தடுப்பு ஆய்வுகளை மேற்கொண்டு, அவற்றை அமல்படுத்த வேண்டும். பாதசாரிகள் நடப்பதற்காக நடை பாதைகளை அகலமாக்கி, சாலையோர பார்க்கிங்கை கட்டுப்படுத்தினால், விபத்துகள் குறையும். இவ்வாறு சீனிவாசன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment