Saturday 24 January 2015

எம்மை ஏமாற்றிக்கொண்டிருக்கும் “6 விஞ்ஞான பொய்கள்”!


6. வாத்தின் “குவாக்” சத்தம் எதிரொலிக்காது!
duck-qwakபாடசாலைகளில் எதிரொலி பற்றி கற்பிக்கப்படும் போது வாத்து எழுப்பும் “குவாக்” ஒலி விதிவிலக்காக எதிரொலிக்காது என கற்பிக்கப்பட்டது. எனினும் அது தவறு என தற்போதைய விஞ்ஞான ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.
உண்மையில் “குவாக்” ஒலி எதிரொலிக்கிறது, எனினும் நமது செவிப்பறையும் (அதனுடன் இணைந்த மூளை நரம்புகளும்) அந்த ஒலியின் மீடிறனிற்கு (frequencies) எதிர்வினையைக்காட்டுவதில்லை! அதனாலேயே வாத்தின் “குவாக்” ஒலி நமது காதுகளுக்கு எதிரொலிக்காததுபோன்று தோன்றுகிறது.
“குவாக்” ஒலிக்கு எதிரொலிப்பு உண்டு என்பது, விசேடமாக தயாரிக்கப்பட்ட எதிரொலி அறை மூலம் நிரூபிக்கப்பட்டது.
5. நாம் அனைவரும் வித்தியாசமானவர்கள்.
everyone-sameபாடசாலைகளிலும், வீடுகளிலும், மன எழுச்சியூட்டும் புத்தகங்களிலும் நாம் ஒவ்வொருவரும் தனித்தனி பண்புடையவர்கள் என கூறப்பட்டுவருகிறது. ஆனால் அது பொய் என ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.
நாம் வெளித்தோற்றத்தில் பார்ப்பதற்கு மட்டுமே வித்தியாசமாக இருப்பதாகவும்; ஆனால், ஒரே சூழ் நிலையில் ஏற்படும் நிகழ்வுகளுக்கு அனைவரும் ஒரே விதமான நடத்தையையே காட்டுவதாகவும் கூறியுள்ளார்கள். அதாவது பிறந்ததில் இருந்து ஒரே விதமான சூழ் நிலைகளை சந்தித்துவாழும் எவரும் ஒரே விதமான மறுமொழிப்பு நடத்தையையே காட்டுவார்கள்.
பல ஆண்டுகளாக பலரிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டது.
4. தினமும் 8 குவளை தண்ணீர் அருந்த வேண்டும்.
8-glassesநமது பாடத்திட்டத்திலேயே இந்த கருத்து இருக்கிறது. எனினும், 8 குவளை நீரின் அளவு என்பது தவறான ஒன்றாகும்.
நாம் உண்ணும் தாவரங்கள், பழங்கள், குடிக்கும் குளிர்பாணங்கள் என்பவையும் உடலிற்கு நீரை தருவிக்கின்றன.
குடி நீர் குடிக்காமல் சாதாரணமான முறையில் தாவரங்கள், பழங்கள், இதர பாணங்கள் குடித்துவந்தாலே ஒரு மாதத்திற்கு மேலாக எந்தவித உடல் கோலாறும் இன்றி வாழமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
3. வெளவாலால் பார்க்க முடியாது.
batஇதுவும் எமது அறிவியல் பாடத்திட்டத்தில் கூறப்பட்டுவரும் ஒரு தவறான தகவலாகும். கூறப்படுவது போன்று உண்மையில் வெளவால்கள் பறப்பதற்கு எதிரொலித்திறன் பயன்படுகின்ற போதிலும், அவற்றிற்கு சாதாரண விலங்குகளைப்போன்று கண்கள் உண்டு. அக் கண்கள் பொருட்களை பார்வையிடவும் உதவும். ஆனால், அவை கண்களின் பார்வைத்திறனை பிரதான ஊடகமாக பயன்படுத்துவதில்லை!
அதாவது நாம் ஒரு பாதையில் செல்வதற்கு கண்களை பிரதான உணர் ஊடகமாகவும் காதுகளை உப உணர் ஊடகமாகவும் பயன்படுத்துவதைப்போன்று வெளவால்கள் காதுகளை பிரதான உணர் ஊடகமாக பயன்படுத்துகின்றன.
2. நிலவில் இருந்து பார்த்தால் தெரியும் ஒரே ஒரு மனித உருவாக்கப்பொருள் சீனப்பெருஞ்சுவர் ஆகும்.
chinawallargeஇது பாட இணைவிதானப்புத்தகங்களிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகும் ஒரு பொய்த்தகவலாகும். உண்மையில் வாணில் இருந்து பார்க்கும் போதே சீனப்பெருஞ்சுவர் தெரிவதில்லை. அப்பலோ விஞ்ஞானிகள் இதை செய்மதிப்பட உதவியுடன் எப்போதோ நிரூபித்துவிட்டார்கள். எனினும் இன்றுவரை இத்தகவல் நம்பப்படுகிறது.
இவ் வதந்தி பரவுவதற்கு முதல் முதலாக வித்திட்டவர் ரிச்சர்ட் ஹலிபூர்டன் ஆவார். பின்னர் பல நாடுகளில் பாடசாலை கல்வி முறையிலும் சேர்க்கப்பட்டது.

1. நியூட்டனின் விதி கண்டறியப்படுவதற்கு அப்பிள் காரணமாகும்.
gravityஎமது பாடத்திட்டத்தில் “அப்பிள் தலையில் விழுந்த கதை” மூலமாகவே நியூட்டனின் விதி அறிமுகப்படுத்தப்படுகிறது. எனினும் நியூட்டனின் புவியீர்ப்பு விதி கண்டறியப்பட்டதற்கும் அப்பிளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
நாம் அனைவரும் கற்றுக்கொண்ட அப்பிள் தலையில் விழுந்த கதையை நியூட்டன் எந்த இடத்திலும் சுயமாக குறிப்பிட்டிருக்கவில்லை!

No comments:

Post a Comment