Sunday 18 January 2015

ஆஸ்கர் தேர்வில் வெள்ளையர்கள் ஆதிக்கம் குறித்து விமர்சனம்

சிறந்த நடிகர்- நடிகைகளுக்கான ஆஸ்கர் விருதுக்கான தெரிவுப் பட்டியலில் வெள்ளை இனத்தவர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ள நிலையில், வருங்காலத்தில் ஆஸ்கர் விருதுக்கான பட்டியல்களில் வெவ்வேறு பின்னணிகளைக் கொண்டவர்கள் இடம்பெற வேண்டியதன் அவசியத்தை ஆஸ்கர் விருது வழங்கும் அமைப்பின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
செரில் புனே
செரில் புனே
பல்வேறுபட்ட கருத்துக்களையும், குரல்களையும் எதிரொலிப்பதில் ஆஸ்கர் அமைப்பு பெரும் முன்னேற்றங்களை கொண்டுவர முயற்சிப்பதாக அந்த அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் கறுப்பினத்தவரான செரில் புனே ஐசக்ஸ் தெரிவித்துள்ளார்.
சிறந்த நடிகர், நடிகை மற்றும் சிறந்த துணை நடிகர்களுக்கான விருதுகளுக்கான போட்டியில் இருக்கும் 20 பேருமே வெள்ளை இனத்தவர்களாக உள்ளனர்.
இயக்கம் மற்றும் கதை வசனம் ஆகிய துறைகளுக்கான ஆஸ்கருக்கு ஒரு பெண் கூட தேர்வு செய்யப்படவில்லை.
ஹாலிவுட் திரைத்துறையினருக்கு கிடைக்கக் கூடிய மிகப் பெரும் அங்கீகாரமாக ஆஸ்கர் விருதுகள் கருதப்படுகின்றன.
2015-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுவிழா அடுத்த மாதம் 22 ம் திகதி நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment