Saturday 24 January 2015

காதல் சின்னமும் பின்னனியும்! – சுவாரஷ்ய வரலாறு/கருத்துக்கள்


url-6-14காதல் சின்னம், காதலை வெளிப்படுத்துவதற்கும் காட்டுவதற்கும் பல காலமாக அரச இலையை ஒத்த அமைப்புடைய ஒரு சின்னம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த சின்னம் தொடர்பாக இன்று பார்க்கலாம்.
காதலை வெளிப்படுத்துவதற்கு மேற்படி சின்னம், 13 ஆம் நூற்றாண்டில் இருந்தே பாவணைக்கு வந்ததாக கூறப்படுகிறது. 1250 ல் வெளிவந்த ஃபிரெஞ்சுபுத்தகம் ஒன்றில் பயன்படுத்தப்பட்டிருந்தது. இப்போது இருப்பதை விட சற்று வித்தியாசமாக இருந்த அச்சின்னம் பின்னர் மேம்ப்படுத்தப்பட்டு இப்போது இருப்பது போன்ற சின்னம் 15 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது.
இச்சின்னம் எப்படி உருவானது? என பார்ப்போம்.
habitatspa2இச்சின்னம் பற்றி பல கருத்துக்கள் இருந்தாலும், முதன்மை பெறும் கருத்தாக இருப்பது; “பெண்களின் பின் புற வடிவமைப்பை குறிப்பதே இச்சின்னம்” என்பதாக உள்ளது.
இடை சிறுத்து பெண்களின் பின் புற எலும்புகள் அகலமாக இருக்கும் போது, “காதல் சின்னத்தை” தலை கீழாக வைத்த அமைப்பில் இருக்கும். (பின் புற எலும்புகள் அகலமாக இருப்பது பிரசவத்தை இலகுவாக்கவே.) பெண்களின் பின்னழகு ஆண்களில் மனதில் காதல் அலைகளை உருவாக்கும் வல்லமை வாய்ந்தது என்பது சமூக ஆய்வுகள் மூலம் எட்டப்பட்ட முடிவு. எனவே, காதலை குறிப்பதற்கு பெண்களின் பின்னழகு சின்னமாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பல ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.
மேலும் சில கருத்துக்கள் :
cupid368Cupid எனும் ரோமானியர்களின் காதல் கடவுளின் கைகளில் இருக்கும் வில்லை குறிக்கும் அமைப்பாக இது இருக்கும் என ஒரு கருத்துள்ளது.
முத்தத்தின் போது வாய் உதடுகளின் பக்க வாட்டிலான அமைப்பை குறிப்பதாக கருதப்படுகிறது.
இரு அன்னப்பறவைகள் ஒன்றை ஒன்று முட்டிக்கொள்ளும் போது உருவாகும் அமைப்பை குறிப்பதாகவும் கருத்துள்ளது.
பிறப்புறுப்பு : பெண்களின் பிறப்புறுப்பை குறித்ததே காதல் சின்னம் எனவும் ஒரு கருத்து உண்டு.
SwansCygnus_olorவிதைகள் : விதைப் பையின் அமைப்பு இக் காதல் சின்னத்தை ஒத்ததாக இருப்பதனால், காதல் சின்னம் விதைப்பையின் அமைப்பை குறிப்பதாகவே இருக்கும் என கருதுகின்றார்கள்.
சிலர் இரண்டு விதைகளும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்படும் போது உருவாகும் அமைப்புக்கு நிகரானது என்பதாலும் கூறப்படுகிறது.
பெண்களின் அணைக்கப்பட்ட மார்பகங்களை குறிப்பதாக இருக்கும் எனவும் கருத்துள்ளது.
மனித இதையம் : மனித இதையத்தின் ஒரு பகுதி பார்வையே காதல்url-3-29சின்னமாக்கப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. உண்மை இதையம் மென்மையான காதல் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இல்லை என்பதால், சற்று மேம்படுத்தி காதல் சின்னம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
ref : listverse, Wiki, cracked (1153)

No comments:

Post a Comment