Saturday 24 January 2015

சிங்கம்புலியும் – புலிசிங்கமும்


மனிதன் புதிது புதிதாக ஒவ்வொன்றையும் உருவாக்க ஆசைப்படுபவன்.
சிங்கம்புலி (Liger) , புலிசிங்கம் (Tigon) இவை இரண்டும் இயற்கைக்கு அப்பாற்பட்டு உருவாக்கபட்ட உயிரினங்கள். அதாவது இவை காட்டில் இருக்கிறதோ இல்லையோ வனவிலங்கு பூங்கா மற்றும் உயிரியல் பூங்காவில் இருக்கிறது.
img09640
ஆண்சிங்கம் பெண்புலியுடன் இணைந்து பிறக்கும் புது உயிரினம் சிங்கம்புலி(Liger).
ஆண்புலி பெண்சிங்கத்துடன் இணைந்து பிறக்கும் புது உயிரினம் புலிசிங்கம் (Tigon).
இந்த லைகர் மற்றும் டைகன் இரண்டுமே சிங்கம்,புலி இவற்றின் குணாதிசயங்களை கொண்டிருக்கின்றன. உதாரணமாக லைகர்கள் நீச்சலடிக்க ஆசைப்படுபவை. இவைகள் இரண்டையும் பார்த்தால் வித்தியாசப்படுத்த கொஞ்சம் யோசிக்கனும் உடலில் புள்ளிகள் மற்றும் வரிகள் காணப்படுகிறது. லைகர்கள் தம் பெற்றோரை விட இரண்டு மடங்கு பெரிதாக வளர்கிறது.
img038972
இவற்றை திபெத்திய புத்த பிக்குகள் (லாமாக்கள்) வளர்த்தால் சைவமாக மாற வாய்ப்பு உண்டு !.
இந்த படத்தில், தாய்லாந்து காஞ்சனபூரி புலி கோவிலில்.. புத்த பிக்குகள் வளர்த்தும் புலிகள்.
தற்போது உலகிலேயே பெரிய லைகர் 500 கிலோகிராம் எடையுடன் 10 அடி நீளத்துடன் இருக்கிறது.

369799liger1



இவற்றிற்கு மரபியல் சம்பந்தமான(Dwarfism,gigantism) உடற்குறைகள் அதாவது தாறுமாறான உடல் உறுப்பு பெருக்கம் அல்லது வளர்ச்சி இருப்பதாக சொல்லப்படுகிறது, கண்காணித்து வருகிறார்கள். அதோடு கூட வாழ்நாள் அவற்றின் பெற்றோரை போல் இருக்காது. இதற்கு இன்னும் மரபியல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

No comments:

Post a Comment