Saturday 14 February 2015

இந்தியரைத் தாக்கி முடமாக்கிய அமெரிக்க காவல் துறை அதிகாரி கைது

அமெரிக்காவின் அல பாமா மாகாணத்தில், இந்தி யரைத் தாக்கி முடமாக்கிய அமெரிக்க காவல் துறை அதி காரி கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர் பாக எஃப்.பி.அய். விசார ணைக்கு உத்தரவிடப்பட்டுள் ளது.
இதுகுறித்து அமெரிக்கா வின் மேடிஸன் நகர காவல் துறை தலைமை அதிகாரி லாலி முன்ஸி செய்தியாளர் களிடம் கூறியதாவது:
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், காவல் துறை அதிகாரி பார்கரின் நடவடிக்கைகள் அவரது பதவிக்கு தகுந்தபடியும், மேடி சன் நகர காவல் துறையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையிலும் இல்லை என் பதை கண்டறிந்தேன். இதை யடுத்து, பார்கர் கைது செய் யப்பட்டார். மேலும், அவரை பதவி நீக்கம் செய்யும்படியும் பரிந்துரை செய்துள்ளேன்.
இந்த தாக்குதலில் படு காயமடைந்த சுரேஷ் பாய் படேலிடமும், அவரது குடும் பத்தினரிடமும், நமது நாட்டு மக்களிடமும் நான் மன்னிப் புக் கேட்டுக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில், கூட் டாட்சி விதிமுறைகள் எது வும் மீறப்பட்டுள்ளனவா? என்பதை கண்டறிவதற்காக எஃப்.பி.அய். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
முன்னதாக, அலபாமா வில் உள்ள மாவட்ட நீதி மன்றத்தில், படேல் குடும்பத் தினர் சார்பாக அவர்களது வழக்குரைஞர் ஹென்ரி எஃப் செர்ரட் வியாழக்கிழமை வழக்குத் தொடுத்தார். அதில், காவல் துறை அதிகாரி பார் கரின் தாக்குதலில் படுகாய மடைந்த சுரேஷ் பாய் படே லுக்கு முழு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை இணையமைச்சர் கவலை தெரிவித்தார். வாஷிங்டனில் செய்தியாளர் களிடம் பேசுகையில், இந்த தகவலை அமெரிக்க வெளியு றவுத் துறை செய்தித் தொடர் பாளர் ஜென் ப்ஸாகி தெரி வித்தார்.
இந்தியாவைச் சேர்ந்த 57 வயதான சுரேஷ் பாய் படேல், அலபாமாவில் உள்ள தனது மகன், மருமகளுக்கு அவர் களது குழந்தையை கவனிப் பதில் உதவி செய்வதற்காக அந்நாட்டுக்கு இருவாரங்க ளுக்கு முன் சென்றார். கடந்த 6ஆம் தேதி அவர் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, அவரது நடவடிக்கை யில் சந்தேகமடைந்த சிலர் காவல் துறையினருக்கு தக வல் அளித்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த அமெ ரிக்க காவல் துறை அதிகாரி கள் இருவர், அவரிடம் விசா ரணை நடத்தினர்.
அப்போது, தனக்கு ஆங் கிலம் தெரியாது என படேல் தெரிவித்தார். தனது மகனின் வீடு இருக்கும் இடத்தை தனது கைகளால் அவர் சுட் டிக்காட்டியுள்ளார். அப்போது இரு காவல் துறை அதிகாரி களில் ஒருவரான பாரிக்கர், படேலை திடீரென கீழே தள்ளி தாக்கினார். இதில் படுகாயமடைந்த படேல், நடக்க முடியாமல் முடமா னார். இந்த சம்பவம் அமெ ரிக்க வாழ் இந்தியர்களி டையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment